Q&A with Sri Periyava – 2

Thank you Smt Srividya Nivas for the share. Don’t miss!

Periyava sharanam

Pudhu-Periyava-young-blessing

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புதுபெரியவா ஆன்மீக விஷயங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள்-2
நமது செயல்களை இறைவனுக்கே அர்ப்பணி விட்டால் உடம்பும் உள்ளமும் தூய்மை அடையும்
ஞானபூமி வாசகர்களுக்காக வழங்கிய விளக்க உரை

மணியன் : ஆதி சங்கர பகவத்பாதர் நிலை நாட்டிய அத்வைதக் கோட்பாட்டிற்கு விக்கிரக ஆராதனை பொருத்தமானதா? விக்கிரக ஆராதனைகளிளேயே மக்கள் தொடர்ந்து ஈடுபடும்படியான மார்க்கத்தை சங்கரமடம் ஊக்குவித்து வருவது ஏன்?

சுவாமிகள் :

ஆதி சங்கர பகவத்பாதர் ஷண்மத ஸ்தாபணம் செய்து ஆறு தெய்வ உருவங்களை வழிபடும் முறையை வகுத்துக் கொடுத்தார். ஏதோ புதியதாக

உருவாக்கப்பட்ட ஒன்று இது. ஏற்கனவே பலவாறாக இருந்த முறைகளை ஒரு வழிப்படுத்திப் புதுப்பித்துக் கொடுத்தார் ஆதிசங்கரர். இந்து மதத்தில் ஆலய வழிபாட்டை இவ்வாறு ஒழுங்குபடுத்திப் புதுப்பித்துக் கொடுத்தார் ஆதிசங்கரர். இந்து மதத்தில் ஆலய வழிபாட்டை இவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொடுத்தது அவரே. அத்வைத தத்துவத்தின்படி இறைவன் நம் முன்னே இருக்கிறான். என்பதை நாம் உணர வேண்டும். அப்போது உருவ வழிபாடு அவசியம் இல்லை.

ஆனால் அதற்குறிய மனப்பக்குவம் வரவேண்டும்.அது படிப்படியாகத்தான் வரமுடியும். சங்கர மடத்தில் இதற்குறிய வேதாந்த பாட வகுப்புகளை

நடத்துகிறோம். உருவவழி பாட்டை ஒரு மார்க்கமாக வைத்துக் கொண்டு அருவவழிபாட்டை உணர்ந்து கொள்ள உதவுகிறோம். சாதுர்மாசிய காலங்களில் நானே ஏழெட்டு பேருக்குத் தினமும் ஒரு மணி நேரம் விவேக சூடாமணியைப் பாடப் பயிற்சியாக அளித்து வருகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி :

மற்ற மதங்களில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் வழிபாடு கட்டாயமாக விதிக்கப்படுகிறது. மக்களும் அன்று அதற்குறிய இடத்துக்குப் போய் வழிபடுகிறார்கள். இது போன்ற கட்டுப்பாடான முறையை நம் இந்து மதத்திலும் ஏன் பின்பற்றக்கூடாது?

சுவாமிகள் :

இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு விதமான விசேஷ பூஜைகள் நடைபெற அமைப்பு இருக்கிறது. மாதந்தோறும் பலவிதமான சிறப்பு உற்சவங்களும் நடக்கின்றன. ஏகாதசி கிருத்திகை சதுர்த்தி போன்றவை பக்தர்களைச் சிறப்பாக ஈடுபடுத்துகின்றன. ஆனால் ஆலயத்துக்கு வந்துவழிபாடு செய்வது அவரவருடைய விருப்பத்துக்கே விருப்பப்பட்டு இருக்கிறது. வற்புறுத்தி ஆலயத்துக்கே வந்து ஒரு மணி நேரமாவது இருந்து வழி பட வேண்டும். என்று நாம் சொல்வதில்லை. நிர்பந்தப்படுத்துவதோ இல்லாவிடில் பாவம் சம்பவிக்கும் தோஷம் வரும் என்றெல்லாம் எச்சரிப்பதோ இந்து மதத்தில் இல்லை. பக்தர்கள் சுபாவமாக வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அவரவர் பிரச்சினைகளைத்

தீர்த்துக் கொள்ள ஆண்டவனிடம் வேண்டி அமைதியைப் பெறவேண்டும். இது நமது வாழ்க்கையோடு ஒட்டிய இயல்பான முறை. இதுவே நமது மதத்தின் சிறப்பும்.

கமலா இராதாகிருஷ்ணன் :

கர்மம் பக்தி ஞானம் ஆகிய மார்க்கங்கள் நம்மை இறைவனின் அருளைப் பெறுவதற்கு வழிகாட்டி உதவுகின்றன. இதில் இன்றைய இளைய தலைமுறையினர் கர்ம மார்க்கத்தில் எவ்வாறு ஈடுபடவேண்டும்.

சுவாமிகள் :

மனிதனைக் கடவுளோடு மீண்டும் கட்டுகிற காரியக் கிராமத்துக்கு மூன்று உருவங்கள் உள்ளன. அவை கர்மம் பக்தி ஞானம் ஆகியவை பொதுவாக

பக்தி ஞானமார்க்களே வலியுறுத்தப்படுகின்றன. கர்ம மார்க்கத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதில்லை. இறுதியில் ஞானம் ஒன்றின் முலமாகவே பரம்பொருளை அனுபவிக்க முடியும் என்ற அத்வைதக் கொள்கையிலும் சரி ஞானத்தினால் வலுப்பெற்ற பக்தியே முடிவான சாதனம் என்று மற்ற வேதாந்தப் பிரிவுகள் கூறகிறபடியும் சரி-இரணடிற்கும் கர்மானுஷ்டானங்கள் அடிப்படையாக அமைகின்றன.

நல்ல காரியங்களை செய்வதன்மூலம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். கர்மானுஷ்டானங்களில் வழுவாமல் ஈடுபட்டிருக்கும் ஒருவனுக்கு இந்தப் பாபத்தையும் சிந்திக்கவோ எந்தத் தீங்கையும் செய்யவோ காலம் இராது.விருப்பமும் எழாது இந்தக் கர்மங்களே கடவுளோடு ஆண்மீகத் தொடர்பையும் ஏற்படுத்துகின்றன. நாம் செய்யும் காரியங்கள் எல்லாவற்றையுமே கடவுளுக்கு அர்பணமாகக் கருதிச் செய்ய வேண்டும். அறிவுள்ள எந்த ஒரு மனிதனும் மிகச் சிறந்த ஒன்றைத் தவிர வேறு எதையும் இறைவனுக்கு அளிக்கமாட்டான்.ஆகையால் நமது உலகக் கடைமைகள் ஆண்மீகப் பொறுப்புகள் இரண்டையுமே மிகச்சிறந்த முறையில் ஆற்றியாக வேண்டும் என்று நமக்கு விதிக்கப் பட்டிருக்கிறது. குழந்தைகளோ பெரியோர்களோ இளையதலைமுறையினரோ இப்படிப் பிரதி பலன் கருதாத பக்தி

மனப்பான்மையுடன் செயற்பட்டால் நிஷ்காம்யமாகக் கர்மாக்களைச் செய்யும் பக்குவம் மார்க்கத்துக்கே வழிகாட்டும்.

கங்காதரன் :

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பருவத்திலிருந்து குழந்தைளை இதற்குறிய முறையில் தயார் செய்வது எப்படி?

சுவாமிகள் :

அவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை முதலில் தயார் செய்ய வேண்டும். அந்த ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சிக்கொடுத்து நமது மதம் தரும் பண்புகளையும் கலாச்சாரத்தையும் உணர்ந்து உள்ளத் தூய்மையைப் பெறச்செய்ய வேண்டும். அவர்கள் அந்த அடிப்படையில் குழந்தைகளுக்குப் பயிற்சியை அளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் இது முடியவில்லையானால் வகுப்புகளுக்கு வெளியே தினமும் இந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.சங்கர மடம் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு ஆசிரியர்களை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கூடங்களிலும் பாடபுத்தகங்களை இதற்கேற்ற விதத்தில் ஆரம்பநிலை முதல் அமைத்து வழிபடுத்தி வருகிறது. முதற் தமிழ்ப் பாடபுத்தகத்தில் கூட அ–அணில் ஆ-ஆடு என்று சொல்லித்தராமரல் அ-அப்பா ஆ-ஆறுமுகம் என்கிற முறையில் சொல்லித் தருகிறோம்.

பரந்தாமன் :

வீட்டில் எளிமையான முறையில் நித்திய பூஜை செய்யும்போது எந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்வது நல்லதா?படங்களை வைத்துப் பூஜிக்கலாம?

சுவாமிகள்:

இப்போது பெரும்பாலான இந்துக் குடும்பங்கள் மிகச்சிறிய இடத்தில்தான் வாழவேண்டி இருக்கிறது இந்த ஆசாரம் தவறாமல் வாழக்கூடிய

முறையை அமைத்துக் கொள்வது சிரமம் அதனால் விக்கிரகங்களைவைத்துக் கிரமப்படி பூஜை செய்வதற்கு நம்மால் முடியாது படத்தை வைத்து விளக்கேற்றி வைத்து மலர்களைப் போட்டு தூபதீபம் காட்டி வழிபட்டாலே போதும் எளிமையான சுலோகங்களைச் சொன்னால் போதும் பெரியவர்கள் தகுந்த உபதேசம் பெற்று அர்ச்சனையில் ஈடுபடலாம் வீட்டில் பூஜை நடக்கும் போது குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரையில் அதில் மனம் ஒன்றிக் கலந்து கொள்ள வேண்டும் குளித்துவிட்டு வெளித்தூய்மையைப் பெறுவது முதல் நல்ல சிந்தனையில் அகத்தூய்மை பெறுவது வரையில் எல்லாவற்றையும் அடைய அது உதவும் குடும்பத்துக்கே இதனால் நன்மை கிடைக்கும்

மலர்மன்னன் :

தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதும் வழிபடுவதும் நியாயந்தான் ஆனால் கிரகங்களை HgF செய்வதற்காக ஹோமம் செய்வதும், விசேஷ பூஜை செய்வதும் சரிதானா?கிரகங்களை தெய்வங்களுக்கு சமமாக உயர்த்தி வழிபடுவது முறையாகுமா?

சுவாமிகள்:

இந்து சமயத்தில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது. குருவை தெய்வமாக மதித்துப் போற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறது இதனால் மாதாவோ பிதாவோ தெய்வமாகிவிட மாட்டார்கள் ஆனால் அவர்களை மதித்து வணங்கும்போது தெய்வ உணர்வு நம்மிடம் ஏற்படும். இதுவே அதன் கருத்து மரம் பிராணிகள் ஆகியவற்றில் கூட இறைவனை உணரும். மனப்பான்மையை நம்மிடம் இந்து மதம் ஏற்படுத்துகிறது. தலவிருட்சம் என்று சொல்லி மரத்தை வணங்குகிறோம் வாகனங்களாக மிருகங்களையும் பறவைகளையும் வழிபடுகிறோம். இதுப் போலவே கிரக தேவதைகளை வணங்கும்போதும் நாம் தெய்வ உணர்வை நாடிப் பெற வேண்டும். இந்த தேவதைகள் நமக்கு நற்பலன்களை அளிக்கவல்லவை. வாழ்க்கையின் தொல்லைகளை நீக்கிக் கொள்ள உதவும். ஆகையால் இவற்றிற்குப் பிரீதியாகவும்,

பரிகாரமாகவும் ஹோமங்களையும் பூஜைகளையும் செய்வதில் தவறு ஏதும் இல்லை

அனந்தகிருஷ்ணன் :

நமஸ்காரம் செய்வதில் எப்படிச் செய்ய வேண்டும்- எவ்வளவு தடவைகள் செய்ய வேண்டும் என்று நியதிகள் இருக்கின்றனவா? ¨

சுவாமிகள்:

பூஜை முடிந்த பிறகு கடைசியாக உடல் நன்றாகத் தரையில் படும்படியாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். அது சாஷ்டாங்கமாக இருக்க

வேண்டும். ஆண்கள் தங்களுடைய அவயங்கள் யாவும் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை, கால்,தோல்கள் ஆகியவை மட்டும் தரையில் படும்படி நமஸ்காரம் செய்ய வேண்டும் தூங்கும் போது நாம் எப்படி இருப்பமோ அந்த மாதிரி நமஸ்காரம் செய்ய

வேண்டும் இந்த மாதிரி ஒருமுறை இருக்கிறது முறையோடு நமஸ்காரம் செய்தால் நல்லது நடக்கும். தாயாருக்கும்- தகப்பனாருக்கும் நமஸ்காரம் செய்யும் போது ஒரே முறைதான் பண்ண வேண்டும் நாம் யாரை நமஸ்காரம் செய்தாலும் அவர்கள் நம்மை ஆசிர்வாதம் செய்ய வேண்டும். அவ்வாறு ஆசிர்வாதம் செய்யாதவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது கோவிலுக்கு சென்றால் மூன்று முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். வைஷ்ணவ சம்பிராதயப்படி ஒரு முறை நமஸ்காரம் செய்தால் போதும். என்று சொல்லப்பட்டு

இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் போது சுவாமி பெயரைச் சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும். சன்னியாசிகளை வணங்கும் போது நான்கு தடவைகள் செய்ய வேண்டும். அவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் போது”நாராயணா”என்று தான் கூற வேண்டும்.

கமலம் :

பெண்கள் அணிகளைப் போட்டுக் கொள்வதற்கு சாஸ்திரப் படி பின்னணி இருக்கிறதா?அவற்றை அணிதில் நியதிகள் உண்டா?

சுவாமிகள் :

சௌந்தர்யலஹரீயில் ஆதிசங்கர பகவத்பாதர் பார்வதியை ஸ்தோத்திரம் செய்கையில் உன்னுடைய காதணியான தோட்டின் மகிமையால்தான்

ஸ்ரீபரமேஸ்வரன் சமுத்திரத்திலிருந்து உண்டான ஆலகால விஷத்தை சாப்பிட்டும் கூடச் சங்கடமின்றி இருக்கிறார் என்று பாடுகிறார். அதையே தவஜனநீ தாடங்க மஹிமா என்கிறார். தாடங்கம் என்றால் தோடு. தோடு என்பது மங்களகரமானது. ஆகவே பெண்கள் முக்கியமாகக் சுமங்களிகள் அணியாமல் இருக்கக்கூடாது. காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, கையில் வளையல், காலில் மெட்டி ஆகியவை அணிகலன்களாக இருந்தாலும் மங்கலப்பொருட்களாகச் சொல்லப்படுகின்றன கல்யாணத்தில் முக்கியமானது தாலி கட்டுவது என்பது. அதைத்தான் மங்கள

சூத்திரம், மங்கலநாண் என்பார்கள். ஆகவே, இது மூன்று முடிச்சு போடக்கூடிய மங்கலக் கயிறாகத்தான் இருக்கவேண்டுமென்று தெரிகிறது. ஆனால் தற்காலத்தில் பலர் தங்கச்சங்கிலியை வாங்கி அதில் மந்திரத்தில், ‘தாலி கட்டுகிறேன்’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘கோத்து போட்டு விடுகிறேன்’ என்று சொல்லப்படவில்லை. மேலும் தாலி என்பது மங்கலப் பொருள். அதை அணிகலன்களைப்போல எடுத்து

மாட்டி வைப்பது என்பது சரியல்ல. ஒரு விசேஷப் புண்ணிய காலங்களில் – தாலிக்கயிறு நைந்து போகும் சமயம் – வேறு கயிற்றை மாற்றி அணியலாம். அணிகலன்களைப் போல அவ்வப்போது மாற்றக்கூடாது.

சத்யகாமன் – (நன்னிலத்திலிருந்து ஒரு வாசகர் கடிதம்) கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம்மடைய பெயரில் ª ய்து கொள்வது நல்லதா? சுவாமி பேரிலேயே செய்து விடுவது சிறந்ததா?

சுவாமிகள் – கோயிலில் வழிபடும் போது, தீபதூப ஆரத்திகளைப் பார்த்து, மனத்துக்குள்ளேயே எளிமையுடன் இறைவனின் திருநாமத்தைச் சொல்லி, நாம் வழிபடுவதே சிறந்த முறை. தனிப்பட்ட முறையில், குறிப்பாக சில வேண்டுதல்கள் இருந்தால் அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் அதற்கு அவசியம் இல்லலை. கோயிலில் இறைவனை வணங்கி மனச்சாந்தியைப் பெறுவது என்பது நம்முடைய மனத்தைப் பொறுத்தது.

பரந்தாமன் – பூஜை செய்வதற்குப் பலவிதமான உபசாரப் பொருட்கள் தேவைப்படுகிறது. அவற்றை வாங்கிச் சேகரிக்க முடியாத எளியவர்கள்

பூஜாபலனைப் பெறுவது எப்படி?

சுவாமிகள் – ஜலத்தினால் அபிஷேகம் – புஷ்பத்தினால் அர்ச்சனை -அலங்காரம் – நைவேத்தியம் – ஆரத்தி – நமஸ்காரம் ஆகியவகைளைப் கொண்டு பூஜை செய்வது, வெளிப்புறப் பூஜை. இதை பாஹ்ய பூஜை என்று குறிப்பிடுவார்கள். மேற்சொன்ன இத்தனை உபசாரங்களையும் மானசீகமாகப் பொருட் செலவில்லாமல் செய்வது மானசீகப்பூஜை. இது உட்புற வழிபாடு, மூர்த்திகளுக்க வெளிப்புற பூஜை செய்யும்போது எல்லாப் பொருட்களும் கிடைக்காவிட்டால், எந்தப் பொருள் இல்லையோ அதற்குப் பதிலாகப் புஷ்பத்தையோ, அட்சதையையோ சுவாமியின் மீது இடலாம்.மானசீகப் பூஜையில் இத்தனை விஷயங்களையும், மனத்தால் பாவித்துப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடலாம். கந்தம் (சந்தனம்) , புஷ்பம், தூபம் (சாம்பிராணி) , தீபம் (கற்பூரம்) . நைவேத்யம் (பழம்) ஆகியவை சுருக்கமாகப் பூஜை செய்வதற்குரிய ஐந்து உபசாரங்கள். எளியவர்கள் அந்த அளவில் செய்தாலே போதுமானது.

சுமன் – நமது அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளவேண்டிய பழக்கங்கள் எப்படி நம்முடைய மனத்தையும் உடம்பையும் தூய்மைப்படுத்தும்? இதற்குச் சில எளிய பழக்க முறைகளைச் சொல்ல முடியுமா?

சுவாமிகள் – காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும்.ஆனால் இதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். அம்மன் அருளும் கிடைக்கும். இந்த மூன்று சக்திகளும் நமது உள்ளங்கையில் அடங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.சாப்பிடுவதில் ஒரு முறை உண்டு. மிருகங்கள் எழுந்தவுடன் சாப்பிடும். ஆனால் மனிதன் அப்படி அல்ல. எழுந்த பின் உடலை உள்ளேயும் -வெளியேயும் சுத்தப்படுத்திக் கொண்டு அளவாகச் சாப்பிடவேண்டும். குளித்துப் பூஜை செய்து உண்பது என்பது இதற்காகத்தான் ஏற்பட்டிருக்கிறது.

நாள் முடிவில் தூங்கப் போவதற்கு முன் காலையிலிருந்து இரவு வரை செய்த வேலைகளை நினைத்து ஆராயவேண்டும். கெடுதல்கள் செய்திருந்தால் அவற்றை மீண்டும் செய்வதில்லை என்று மன உறுதி கொள்ளவேண்டும். உடலைப் பேணிக் காப்பாற்றம் போதுகூட, அது இறைவன் ஆலயம் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைத் தூய்மையாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எந்தச் செயலை செய்தாலும் அது இறைவனுக்கே அர்ப்பணம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாடிப்போன பூவையோ, அழுகிப்போன பழத்தையோ, ஆண்டவனுக்கு நைவேத்தியமாக உபயோகிக்க மாட்டோம். நம்முடைய செயல்களும் அப்படி அர்ப்பணம் என்று நாம் நினைத்து விட்டால், எண்ணத்திலும் – செயலிலும் களங்கம் ஏற்படாது.

ஸ்ரீகவி – முக்கியமான மந்திரங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருப்பது ஏன்? இவற்றை ஏன் மொழி பெயர்த்துச் சொல்லக்கூடாது?

சுவாமிகள் – மந்திரங்கள் யாவுமே அட்சரவடிவானவை – எழுத்து வடிவமானவை. மந்திரங்களுக்கு முக்கியமானது உச்சரிப்பும் – ஸ்வரமும்தான். இவை தாம் மந்திரங்களுக்குச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை. ஆகவே, ஒரு மந்திரத்தை உச்சரிப்பவரின் தகுதியைப் பொறுத்தம், உச்சரிக்க வேண்டிய முறைகளைப் பொறத்துமே, அந்த மந்திரத்தினால் பலன் கிடைக்கிறது. அப்படி இந்த மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிப்பதன் மூலமாகத்தான் நாம் புனிதத் தன்மையை அடைய முடியும். புனிதத் தன்மை என்பது உலகில் பல பொருள்களிலும் இருக்கிறது.

உதாரணமாக, கங்கை புனிதம் வாய்ந்தது. இறைவன் புனிதமே உருவானவன். ஞானிகளும் – மகான்களும் புனித வாழ்க்கையைக் கைக் கொண்டவர்கள். இதே போலப் புனிதம் பல இடங்களிலும் பரவி இருக்கிறது. ஆனால் மந்திரம் அப்படியல்ல. புனிதத்தன்மையோடு சக்தியும் இருக்கவேண்டியது அது. ஆகவே சக்தியுடன் விளங்குவதற்காக, அதற்கேற்ற ஸ்வரம் – உச்சரிப்புடன் அது சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகிறது. இதை மொழி பெயர்த்துச் சொல்ல முடியாது.

கமலா ராதாகிருஷ்ணன் – குழந்தைகளுக்கு ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் படிக்க வசதியாகப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது நல்லதா? அதற்குப் பள்ளிக்கூடங்களில் வசதி செய்ய முடியுமா?

சுவாமிகள் – ஒரு சில பள்ளிக்கூடங்களில் சிரத்தை எடுத்துக் கொண்டு இதைப் போலச் செய்திருக்கிறார்கள். சங்கர மடமும் சில பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறது. இராமாயண புத்தகத்தைப் படிப்பது மட்டும் போதாது. அதன் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் குழந்தைகளுக்கு அதில் உள்ள சந்தேகங்களை நீக்கிச் சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் சரியான பலன் கிடைக்கும். திரௌபதி – பஞ்சபாண்டவர்களைப் பற்றிப் படிக்கும் போது,’ஒரு மனைவிக்கு ஐந்து புருஷர்களா? அது எப்படி?’ என்று சந்தேகம் ஏற்படலாம். ‘ஒரு கண்ணனுக்கு இத்தனை கோபிகாஸ்திரீகளா?’ என்று ஐயம் பாகவதத்தில் ஏற்படலாம். திரௌபதி அக்கினியிலிருந்து பிறந்தவள் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். கண்ணனைப் பரமாத்மாவாகவும், கோபிகைகளை ஜீவாத்மாவாகவும் பார்க்கும் மனப்பக்குவம் வரவேண்டும். இதையெல்லாம் கதையைத் தத்தவப் பின்னணியுடன் படிக்கப் பெரியோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு குழந்தைகளையும நல்லமுறையில் படித்துத் தெரிந்து கொள்ள வைப்பதற்கு வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.

கங்காதரன் – ஒரே பகுதியில் ஒரு சில ஆலயங்களில் பூஜை புனஸ்காரங்கள் விமரிசையாக நடைபெறும் போது, இன்னொரு ஆலயத்தில் விளக்கேற்றுவதற்குக் கூட வசதி இல்லாமல் போய்விடுகிறது. இந்தக் குறையை எப்படிச் சரிசெய்வது?

சுவாமிகள் – இதை அரசாங்கம்தான் அறநிலையத்துறையின் மூலம் சரி செய்யவேண்டும். உதாரணமாக, அரசாங்கத்தில் ஒரு துறையினால் செலவும் இழப்பும்கூட ஏற்படுகிறது. இன்னொரு துறையினால் நிறைய வருவாய் கிடைக்கிறது. இதனால் ஒரு துறையில் அதிகாரிகள் சம்பளம், போதாமல் சிரமப்படுவதும், இன்னொரு துறையில் அதிகப் சம்பளம் பெறுவதுமான நிலை ஏற்படுவதில்லை. எல்லாத் துறைகளையும் ஒரு சேரப் பார்த்து அரசாங்கம் நிர்வாகத்தைச் சமாளிக்கிறது. அதைப்போல அறநிலையத்துறை எல்லா கோயில்களையும் ஒரு சேரப் பார்த்து, பராமரிப்பைச் சீர்படுத்த வேண்டும். முதலில் ஒரு வட்ட அளவில் பதினைந்து கோயில்கள் இப்படித் தொகுக்கப்படலாம். பிறகு மாவட்ட அளவில் – பின் மாநில அளவில் இந்த நிலையைச் சீர்ப்படுத்தலாம்.

மலர்மன்னன் – கோயிலுக்கு நிலபுலன்கள் ஏராளமாக இருந்தாலும், நைவேத்தியத்துக்குகூட அன்னம் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை

ஏற்படுகிறதே? இதை எவ்வாறு சீர்ப்படுத்தலாம்?

சுவாமிகள் – அரசாங்கம் பொதுஜனங்களுக்குச் சில கட்டுப்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இவற்றிலிருந்து கோயில்களைப் பொறுத்த வரையில் விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்டவர் நிலஉடைமைக்கு உச்ச வரம்பு உண்டு. கோயில் நிலத்தக்கு அப்படி இல்லை. தனிப்பட்டவர் வீட்டில் வசிப்பவர் வாடகையைச் சரியாகக்கொடுக்காவிட்டால் வெளியே அனுப்புவது கடினம். கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் நடவடிக்கை எடுப்பது இவ்வளவு சிரமம் இல்லை. கோவிலுக்கு நிலம் இருந்தும் நெல், கிடைக்கவில்லையென்றால்,

அந்த நிலங்களை அனுபவித்து வரும் குத்தகைகாரரும் சரியில்லை என்று தான் அர்த்தம். அப்படித் தப்பு செய்கிறவர்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வெளியேற்ற கோவிலுக்குரிய பண்ணைகளைப் பொறுத்து குத்தகைச் சட்டங்களை மாற்றி அமைத்தால் நிலைமை சரியாகி விடும்.

கமலம் – முற்பிறவியின் கர்மாவைப் பொறத்துத் தான் மறுபிறிவியின் பலன் கிடைக்கும் என்றால், முதலில் பிறவி எப்படி ஏற்பட்டது.

சுவாமிகள் – ‘மரத்திலிருந்து விதை கிடைத்ததா? விதையிலிருந்து மரம் வந்ததா?’ – இது என்றும் கேட்கப்படும் முடிவேயில்லாத கேள்வி. ஆனால் முதலில் மரம் தானே இறைவன் அருளால் உதித்தது என்பதே நாம் நம்புவது. இந்த மதத்தில் எந்த ஜீவராசிக்கும் ஆரம்பம் என்பது கிடையாது. இது சநாதனமதம். எங்கும் நிறைந்துள்ள பரமாத்மா தனக்குள் விசேஷமான மாயாசக்தியினால் ஜீவர்களின் கர்மாக்களை அனுசரித்து, ஈசுவரன்மூலமாக அவித்தையில் உலகைப்படைக்கிறான். மாயைக்கும் – பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பினால்தான் உலகமே இயங்குகிறது. படைக்கப்பட்ட மனிதன் அந்த சக்தியைத் தனது வாழ்க்கைக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்துகிறான். உதாரணமாக, மனிதன் மின்சாரசக்தியின் மூலம் பல வசதிகளையும் பெறுகிறான். அஜாக்கிரதையாக உபேயாகித்து அதிர்ச்சியையும், அடைகிறான். இரண்டிற்கும் காரணமானது ஒரேசக்தியே. அதைப்போல, ஆண்டவனின் சக்தியை நாம் நல்லமுறையில் பயன்படுத்தினால் நன்மைகளைப் பெறுவோம். அறியாமை காரணமாகத் தவறாக உபயோகித்தால் துன்பத்தை அடைகிறோம்.

Advertisements

1 Comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s